விளம்பரம்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒன்றரை வருடம் நடிக்க வைத்து டார்ச்சர் செய்தார் செல்வராகவன் என்று கூறுவதை ஏற்க முடியாது என நடிகை ரீமா சென் கூறினார்.

அவர் கூறுகையில்,

ஆயிரத்தில் ஒருவன் கதையை டைரக்டர் செல்வராகவன் என்னிடம் சொல்லும்போதே படம் முடிய நீண்ட நாட்கள் ஆகும் என்று எனக்கு தெரியும்.

அதற்கு என்னைத் தயார்படுத்திக கொண்டுதான் நடிக்கவே ஒப்புக் கொண்டேன். படம் தொடங்கி ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. 95 சதவீதம் படப்பிடிப்பு இதுவரை முடிந்திருக்கிறது. உண்மையிலே வித்தியாசமான வேடம்.

என் கேரியர் பெஸ்ட் படம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன்தான். இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இந்தப் படத்தில் எனக்கும் செல்வராகவனுக்கும் ஏதோ இருப்பதாக கிசுகிசு வருகிறது. மேலும் என்னை அவர் அதிக நாள் நடிக்க வைத்து டார்ச்சர் செய்வதாகவும் கூறுவதில் உண்மையில்லை.

உண்மையில் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நிறையபேர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி.

எந்த பரபரப்பும் இல்லாமல் ஜாலியாக அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்க்கிறார். இப்படம் முடிக்கும்வரை வேறு படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என நானாகத்தான் முடிவு செய்திருந்தேன்.

இந்தியில் கோவிந்தாவுடன் நான் நடித்துள்ள சல் சலா சல் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு என் அடுத்த இன்னிங்ஸ் இன்னும் அர்த்தத்துடன் ஆரம்பமாகும் என்கிறார் ரீமா.








பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறது வில்லு டீம். விரைவில் கேரளா அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறார்களாம்.

இயற்கை எழில் சூழ்ந்த அதிரம்பள்ளி அருவியில் பாடல் காட்சி ஒன்றை எடுப்பதாக திட்டம். நயன்தாராவை நனையவிட்டு ரசிகர்களை 'ஹீட்'டாக்கும் இந்த 'கிக்' திட்டம் முன்பு வில்லுவின் ப்ராஜெக்டில் இல்லை.

குசேலன், சத்யம் படட்ஙகளில் நயன்தாரா கடைவிரித்திருக்கும் கிளாமரில் கிலியாகி, நாம் பின்தங்கிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையில், பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டதாம் இந்தப் பாடல் காட்சி.

வில்லுவை ஜில்லாக்கும் இந்த முயற்சியை வேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள் ரசிகர்கள்!